Monday, 4 November 2024

பிரபஞ்ச உண்மைகள்

https://youtu.be/7dBMSmbgVR8?si=R2Vx_mLHth-lON59

ஸ்ட்ராபெரி ..

7.32 ஸ்ட்ராபெரி ..

சான் பிரான்சிஸ்கோ நகரின்     
செழிப்பான தோட்டத்திலே
செறிவாகப்  பழுத்திருக்கும்
செக்கச் செவேரென்ற
ஸ்ட்ராபெரி  பழங்களையே
பாங்காக பறிக்கையிலே
பொங்கிடும்  உவகையது !
அமெரிக்க நாட்டினிலே
அழகாக  பாத்தி கட்டி
இயற்கை உரமிட்டு
இன்பமாய் வளர்த்திட்ட
வனப்பான செடிகளிலே
வளமாகக் கனிந்திருக்கும்
நறுஞ்சுவை கனிகளையே
நாமாக பறித்துண்ணும்
நல்லதொரு வாய்ப்பதுவே!!