7.32 ஸ்ட்ராபெரி ..
சான் பிரான்சிஸ்கோ நகரின்
செழிப்பான தோட்டத்திலே
செறிவாகப் பழுத்திருக்கும்
செக்கச் செவேரென்ற
ஸ்ட்ராபெரி பழங்களையே
பாங்காக பறிக்கையிலே
பொங்கிடும் உவகையது !
அமெரிக்க நாட்டினிலே
அழகாக பாத்தி கட்டி
இயற்கை உரமிட்டு
இன்பமாய் வளர்த்திட்ட
வனப்பான செடிகளிலே
வளமாகக் கனிந்திருக்கும்
நறுஞ்சுவை கனிகளையே
நாமாக பறித்துண்ணும்
நல்லதொரு வாய்ப்பதுவே!!
No comments:
Post a Comment